தமிழகம் முக்கியச் செய்திகள்

மாநில அந்தஸ்து இல்லையெனில் தேர்தல் புறக்கணிப்பு: நாராயணசாமி கருத்து!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் உறுதியாக உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக கிரண் பேடி பொறுப்பேற்றது தொடங்கி முதல்வர் நாராயணசாமிக்கும், அவருக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுப்பதாக கிரண் பேடியை கண்டித்து நாராயணசாமி தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வந்தார். மேலும், புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ளார்.


இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்பது தங்களது கருந்து எனவும், ஆனால் கட்சித் தலைமை என்ன சொல்கிறதோ அதனை ஏற்போம் என்றும் தெரிவித்தார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக கடந்த 35 ஆண்டுகளாக காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இணைந்து போராடி வருவதாக அவர் கூறினார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரக்கூடாது என்பதுதான் பாஜகவின் எண்ணம் என்றும், பிரதமர், உள்துறை அமைச்சர், குடியரசுத் தலைவர் ஆகியோரிடம் அளித்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்

Advertisement:

Related posts

மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கின் கார் கவிழ்ந்து விபத்து; அவரது மனைவி மற்றும் தனி உதவியாளர் உயிரிழப்பு!

Saravana

இந்தியாவில் 2 கொரோனா தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறதா?

Saravana

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து வரும் 26ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!

Nandhakumar

Leave a Comment