செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

மகளிருக்கு மரியாதை கொடுக்கும் பாஜக: நிர்மலா சீதாராமன்

பாஜகவில் மட்டும் தான் மகளிருக்கு உரிய மரியாதை, வளர்ச்சி மற்றும் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆா். காங்கிரஸ் 16, பாஜக 9, அதிமுக 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு இன்று பாஜக தேர்தல் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டர். அப்போது பேசிய அவர், “புதுச்சேரி மக்களின் கருத்துக்களைக் கேட்டுத் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பிரதமருக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்பதற்காகவே நாராயணசாமி அரசு பல திட்டங்களை நிறைவேற்றவில்லை என கூறினார். பாஜகவில் மட்டும்தான் மகளிருக்கு உரிய மரியாதை வழங்கப்படுகிறது.

இந்த தேர்தல் அறிக்கையில் புதுச்சேரியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடப்படும், விமான நிலையம் விரிவாக்கப்படும், மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் உள்ளிட்ட முந்தைய புதுச்சேரி அரசு நிறைவேற்றப்படாத பல சிறப்பான திட்டங்கள் இருப்பதாகவும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அவை நிறைவேற்றப்படும்” என்று நிர்மலா தெரிவித்தார்.

Advertisement:

Related posts

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1.2 கோடியாக உயர்வு!

Karthick

திமுக-காங்., கூட்டணியில் இழுபறி! கே.எஸ்.அழகிரி கண்ணீர் மல்க பேச்சு!!

Jeba

குழந்தைகளுக்காக உருவாகும் இன்ஸ்டாகிராம் கிட்ஸ் செயலி!

Gayathri Venkatesan