செய்திகள் முக்கியச் செய்திகள்

புதுச்சேரியில் வாக்குபதிவு நிறைவு!

புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவந்தது. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்தநிலையில், மாலை 7 மணிக்கு நிறைவடைந்துள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் வாக்குகளை ஆர்வத்துடன் பதிவு செய்தனர். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைபடுத்தப்பட்டவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்க அனுமதிகப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வரவழைக்கப்பட்டு பிபிஇ கிட் அணிந்து வாக்களித்துள்ளனர்.இந்நிலையில், புதுச்சேரியில் மாலை 5 மணி நிலவரப்படி 77.82 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 34 ஆண்டுகள் சிறை!

Jayapriya

நூறாவது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம் !

Gayathri Venkatesan

“பா.ஜ.கவை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்” – வைகோ கண்டனம்!

Karthick