செய்திகள் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 81.70 சதவிகித வாக்குகள் பதிவு

புதுச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைப்பெற்ற தேர்தலில் 81.70 சதவிகிக வாக்குகள் பதிவாகியுள்ளதாக புதுச்சேரி தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைப்பெற்றது. நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவிவருவதால் பல முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 7 மணிவரை நடைப்பெற்றது. இதில் அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்கள் என பலர் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்

புதுச்சேரியில் 30 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன, இங்கு பதிவாக வாக்கு சதவிகிதங்கள் குறித்த தகவல்களை புதுச்சேரி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. . இங்கு நேற்று நடைப்பெற்ற தேர்தலில் 81.70 சதவிகித வாக்குகள பதிவாகிவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஏனாம் தொகுதியில் 91.27 சதவிகித வாக்குகளும் குறைந்தபட்சமாக ராஜ்பவன் தொகுதியில் 73.24 சதவிகித வாக்குகளும் பதிவாகிவுள்ளன.

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை வருகின்ற மே மாதம் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

கணவன் பாலியல் வன்முறையில் ஈடுபடுவது குற்றம் என அழைக்க முடியுமா? நீதிபதி எஸ்.ஏ. பாப்டேவின் சர்ச்சை பேச்சு

Jeba

வேலை தேடி அலையும் இளைஞர்களை முதலாளிகளாக மாற்றுவோம்: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தகவல்!

Saravana

நடிகை நிவேதா தாமஸிற்கு கொரோனா தொற்று உறுதி!

Saravana Kumar