புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் மாலை 7 மணி நிலவரப்படி 81.64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் நேற்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அமைதியாக நடைபெற்றது.
வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்குகளை செலுத்தினர். இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில், மாலை 6 மணி நிலவரப்படி 81 புள்ளி ஆறு நான்கு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஏனாம் தொகுதியில் 91 புள்ளி இரண்டு ஏழு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக ராஜ் பவன் தொகுதியில் 73 புள்ளி இரண்டு நான்கு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
Advertisement: