தமிழகம் முக்கியச் செய்திகள்

ஆன்லைன் வகுப்பு எடுப்பதற்குப் பேராசிரியர்களைக் கல்லூரிக்கு வரவழைக்கக் கூடாது: தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்கு பேராசிரியர்களைக் கல்லூரிக்கு வரவழைக்கக் கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளாது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும் பேராசிரியர்களைக் கல்லூரிக்கு வரவழைக்கக் கூடாது எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அரசின் உத்தரவை மீறி, பெரும்பாலான கல்லூரிகள், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுப்பதற்காக, பேராசிரியர்களைக் கல்லூரிக்கு வரவழைப்பதாகப் புகார் எழுந்ததுள்ளது.

இந்நிலையில், அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு, கல்லூரிக் கல்வி இயக்ககம் விடுத்துள்ள எச்சரிக்கையில், ஆன்லைன் வகுப்பு எடுக்கவோ அல்லது இதர பணிகளுக்காகப் பேராசிரியர்களை, கல்லூரிகளுக்கு நேரில் வரவழைக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு, கல்லூரிக்கு வருமாறு பேராசிரியர்களுக்கு அழுத்தம் தருவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், அரசின் உத்தரவைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

திமுகவைப் பின்பற்றித்தான் அதிமுக திட்டங்களை அறிவிக்கிறது: ஸ்டாலின் விமர்சனம்

Jeba

அதிமுக தாய் மனம் கொண்ட கட்சி :ஓபிஎஸ்

Karthick

இன்று முதல் தமிழகத்தில் இரவு ஊரடங்கு:பேருந்துகளின் நேர அட்டவணை வெளியீடு!

L.Renuga Devi