சினிமா

மே மாதம் திரைக்கு வரும் ‘ஹாஸ்டல்’

அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ஹாஸ்டல் திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகிறது.

அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள படம் ஹாஸ்டல். சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள இந்தப்படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரித்துள்ளார். இந்தப்படம் குறித்து படத்தின் இயக்குநர் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்தப்படம் முழுக்க முழுக்க காமெடி சரவெடியால் நிரம்பியது. படத்தில், அசோக் செல்வன் மற்றும் அவரது நண்பர்கள் தங்கியிருக்கும் ஹாஸ்டலுக்கு சென்று பிரியா பவானி சங்கர் மாட்டிக் கொள்கிறார்.

அதன்பின் அவரை அங்கிருந்து ஹாஸ்டல் வார்டன் கண்ணில் படாமல் வெளியே அனுப்ப அசோக் செல்வம் செய்யும் முயற்சி படம் முழுவதும் சிரிப்பை வரவழைக்கும் என தெரிவித்தார். இந்நிலையில், இப்படம் வரும் மே மாதம் திரையரங்கில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

தேர்தலில் போட்டியிடும் சத்யராஜின் மகள்?

Jayapriya

நடிகை ஸ்ருதி ஓடிடி-யின் மிக பெரிய Fan!

Gayathri Venkatesan

தியேட்டருக்குள் போகி கொண்டாடிய ரசிகர்கள்!

Niruban Chakkaaravarthi