பிரதமர் மோடி சென்னை வருகையின்போது தேவைக்கு ஏற்ப போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகர காவல்துறை மற்றும் நேரு யுவ கேந்திரா சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50 திருநங்கைகள் பங்கேற்று, சாலை பாதுகாப்பு குறித்த பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் கண்ணன், கொரோனா காலங்களில் 38% விபத்துக்கள் குறைந்துள்ளதாக தெரிவித்தார். பிரதமர் மோடி வருகையின் போது ஒரு லட்சம்பேர் வரவேற்க வர இருப்பதாகவும், அதற்கேற்ப சென்னையில், போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Advertisement: