இந்தியா முக்கியச் செய்திகள்

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்!

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அதனை ஏற்றுக் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் அளித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். 

புதுச்சேரியில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி அன்று பெரும்பான்மை இல்லாததால் ஆளும் காங்கிரஸ் – திமுகவின் கூட்டணியின் அமைச்சரவை ராஜினாமா செய்தது. இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் அவரது ராஜினாமா கடிதத்தைத் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் வழங்கினார். முதல்வரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்து மத்திய அமைச்சரவைக்குக் கடிதம் அனுப்பினார். 

மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிதது. இதனைத்தொடர்ந்து இன்று (25-02-2021) புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் அளித்து, குடியரசுத்தலைவர் ஆட்சி அமலுக்கு வந்ததாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். 

Advertisement:

Related posts

அழுகிய நிலையில் குழந்தையின் உடல் கண்டெடுப்பு!

Jayapriya

ஏப்ரல் 15 தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம்!

L.Renuga Devi

சூடானது தேர்தல் களம்: விண்ணப்ப விநியோகம் தொடங்கியது

Niruban Chakkaaravarthi