சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து, செயற்குழு மற்றும் பொதுக்குழுவைக் கூட்டி விஜயகாந்த் முடிவு செய்வார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரச்சாரங்களை அனைத்து கட்சிகளும் முன்னெடுத்து வருகின்றன. பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் விரைவில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில், நடைபெற்ற தேமுதிக செயவீரர்கள் கூட்டத்தில், பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து, கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுவைக் கூட்டி முடிவு செய்யப்படும் எனவும், கூட்டணி குறித்து விஜயகாந்தே அறிவிப்பார் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகமெங்கும் விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொள்வார், என தெரிவித்தார்.
Advertisement: