இந்தியா முக்கியச் செய்திகள்

பாஜகவுக்கு ஆதரவாக பேசினேனா? ஆடியோ குறித்து பிரசாந்த் கிஷோர் விளக்கம்!

மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு தொடர்பாக, பிரசாந்த் கிஷோர் பேசிய ஆடியோ பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, தற்போது 4-வது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம், மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக, தேர்தல் வியூகம் வகுக்கும் பணிகளை செய்துவருகிறது. இந்நிலையில் `பாஜகதான் மேற்கு வங்கத்தில் வெற்றி பெறும்’ என்று பிரசாந்த் கிஷோர் பேசிய ஆடியோ ஒன்றை, பாஜக ஐ.டி விங் தலைவர் அமித் மால்வியா வெளியிட்டு இருப்பது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

அந்த ஆடியோவில், மோடி என்ற பெயருக்காகவும், இந்து என்பதற்காகவும் பாஜகவிற்கு மக்கள் ஓட்டுப் போடுகிறார்கள் என்றும், மேற்கு வங்க மாநிலத்தில் 27% தலித் மக்கள் மற்றும் 1 கோடி இந்தி பேசும் மக்கள் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என பிரசாந்த் கிஷோர் பேசுவது போல இருக்கிறது. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

அதில் அவர் பாஜகவினர் அவர்களது தலைவர்கள் பேசுவதை விடவும், தனது பேச்சுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் பேசிய முழு விவரத்தையும் வெளியிடாமல், ஒருசில வார்த்தைகளை மட்டும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.. மேலும் தான் முன்பு கூறியதுபோன்று, பாஜக 100 தொகுதிகளுக்கு மேல், மேற்குவங்காளத்தில் வெல்ல முடியாது என பிரசாந்த் கிஷோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

”தமிழகம், புதுச்சேரியில் ஒரு இடத்தில் கூட பாஜக வெல்ல முடியாது”- முதல்வர் நாராயணசாமி!

Jayapriya

கடன் தொல்லையால் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன், மனைவி தற்கொலை!

Jayapriya

அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் சென்னையில் இருக்க அதிமுக உத்தரவு

Saravana Kumar