தமிழகம் முக்கியச் செய்திகள்

தபால் வாக்குப் பட்டியல் விவரங்கள்: உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு!

தபால் வாக்குகள் பதிவு தொடர்பாக திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் மூலம் வாக்களிக்க அனுமதியளித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து திமுக மற்றும் மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணையில் உள்ளன.

இந்த நிலையில் தபால் மூலம் வாக்களிக்க உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் தொகுதி வாரியான பட்டியலை வழங்கக் கோரி திமுக எம்.எல்.ஏவும், அக்கட்சியின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தேர்தல் விதிகளில் திருத்தம் கொண்டு வந்து 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் வாக்கு வசதியை வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலைப் பெற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உரிமை உள்ளது. அதன் அடிப்படையில், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் பட்டியலை வழங்கக் கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மனு அனுப்பியும் பதில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Advertisement:

Related posts

விண்வெளியில் சாப்பிட பிரியாணி, கிச்சடி, ஊறுகாய்!

Nandhakumar

அரசு வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

Saravana

’அரசியலுக்கு வர முடியவில்லை’- நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு!

Jayapriya

Leave a Comment