தமிழக சட்டமன்றத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறைக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மூத்த குடிமக்கள் தபால் வாக்கு அளிக்கும் முறைக்கு எதிராக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மூத்த குடிமக்களுக்கு தபால் வாக்கு அளிக்கும், புதிய நடைமுறைகளால் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது, என்று மனுவில் குற்றம்சாட்டியிருந்தார். மனு மீது பரிசீலனை மேற்கொண்ட நீதிபதிகள், தபால் வாக்கு செலுத்த அனுமதி அளித்த சட்டப்பிரிவுகளை ரத்து செய்ய, எந்த தகுதியும் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Advertisement: