தமிழகம் முக்கியச் செய்திகள்

ஏழை மக்களுக்கு சொந்தமாக நிலம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டப்படும்: முதல்வர்!

கிராமத்தில் ஏழை மக்களுக்கு சொந்தமாக நிலம் வாங்கி, கான்கிரிட் வீடு கட்டி கொடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் ஆயிரத்து 745 கோடி ரூபாய் மதிப்பிலான கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட 9 பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், விவசாயிகள் பங்களிப்போடு குடிமராமத்து பணிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே, தமிழக அரசு மீது குறை கூறுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் கொண்டு வந்து சாதனை படைத்த அரசு, தமிழக அரசு என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கிராமத்தில் ஏழை மக்களுக்கு சொந்தமாக நிலம் வாங்கி, கான்கிரிட் வீடு கட்டி கொடுக்கப்படும் என்றும், நகரத்தில் உள்ளவர்களுக்கு அடுக்குமாடி வீடு கட்டி தரப்படும், என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். மேலும், தான் மந்திரவாதி அல்ல, செயல்வாதி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலளித்தார்.

Advertisement:

Related posts

உதகையில் கலைக்கூடமாக மாறிய பழைய கழிவறை கட்டடம்

Jayapriya

“டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு செவிசாய்க்க வேண்டும்” – நடிகர் கார்த்தி

Jeba

பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்புத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம், வரும் 26ஆம் தேதி தொடக்கம்!

Dhamotharan