தமிழகத்தில் திமுக எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாது என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திமுக சார்பில், விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பெயரில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கடந்த 50 ஆண்டுகளில் செய்ய முடியாததை, திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் சரி செய்யும் என திமுக தலைவர் ஸ்டாலின் ஏமாற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், கன்னியாகுமரியில் நடந்த திமுக தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில், பங்கேற்பதற்காக வெளி மாவட்டங்களிலிருந்து ஆட்களை திமுகவினர் அழைத்து வந்ததாக அவர் திமுக குறித்து விமர்சனம் செய்தார்.
Advertisement: