குற்றம் முக்கியச் செய்திகள்

முகநூலால் ஏற்பட்ட விபரீதம்; சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த இளைஞர்!

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த, 16 வயது பள்ளி மாணவிக்கு, தஞ்சாவூரைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர் முகநூல் வழியாக அறிமுகமாகியுள்ளார். அதன்பின் இருவரும் தொடர்ந்து பேஸ்புக் மெசேஞ்சரில் தங்களது நட்பை வளர்த்துள்ளனர். இதில் இருவரிடையேயான நட்பு அதிகரிக்கவே இருவரும் தங்களது மொபைல் எண்ணை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில், திடீரென ஒருநாள் கமலக்கண்ணன் அந்த மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளார். அதில் சிறிது அதிர்ச்சியடைந்த மாணவி தயக்கத்துடன் காதலை ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து, சில நாட்களில் அந்த மாணவியிடம் அரைகுறை ஆடையுடன் புகைப்படம் அனுப்புமாறு கேட்டுள்ளார். அவரும் கமலக்கண்ணன் மீதுள்ள நம்பிக்கையில், தனது அரை நிர்வாண புகைப்படத்தை வாட்ஸ் அப் மூலமாக அனுப்பி வைத்துள்ளார். அவை அனைத்தையும் தனது மொபைலில் சேமித்து வைத்து கொண்ட கமலக்கண்ணன், சிறுமியிடம் நிர்வாணமாக வீடியோ காலில் வர வேண்டும் இல்லை என்றால் தான் மொபைலில் சேமித்து வைத்திருக்கும் அனைத்து புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால், செய்வதறியாது தவித்த அந்த மாணவியும் பல நாட்கள் அவரின் மிரட்டலுக்கு பயந்து கமலக்கண்ணனின் சொல்படி கேட்டுள்ளார்.

இந்நிலையில், தீடிரென ஒருநாள் அந்த மாணவி அரைகுறை ஆடையுடன் கமலக்கண்ணனுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த பெற்றோர் செல்போனை பறித்து என்ன நடந்து கொண்டிருக்கிறது என அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அந்த மாணவி கமலக்கண்ணனால் தனக்கு நடந்து வரும் கொடுமைகளை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில், இதுகுறித்து புகாரளித்தனர்.

இதன் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கமலக்கண்ணனை கைது செய்தனர். மேலும், இவர் திருப்பூரில் ஒரு சாயபட்டரை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருவதையும் இதனுடன், கமலக்கண்ணனுக்கு திருமணமாகி, மனைவி மற்றும் ஒரு குழந்தை இருப்பதும் தெரியவந்தது.

Advertisement:

Related posts

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றதை கொண்டாடிய பூர்வீக கிராம மக்கள்!

Jeba

மேகாலயாவில் டிசம்பர் 21ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

Jayapriya

புதுச்சேரியில் கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்க பாஜக முயற்சி: ஜி.ராமகிருஷ்ணன்

Niruban Chakkaaravarthi