செய்திகள் முக்கியச் செய்திகள்

மும்பை நீதிபதிக்கு 150 ஆணுறைகளை அனுப்பிய அரசியல் ஆய்வாளர்!

அகமதாபாத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கியதை எதிர்க்கும் விதமாக மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிக்கு 150 ஆணுறைகளை அனுப்பி அவமதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை குறித்த வழக்கில் மும்பை உயர்
நீதிமன்றத்தின் நீதிபதி புஷ்பா கனடிவாலா வழங்கிய தீர்ப்புக்கு
பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கனடிவாலாவை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக்கும் உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரை திரும்ப பெறப்பட்டது.

இந்நிலையில் அரசியல் ஆய்வாளரான
தேவ்ஸ்ரீ த்ரிவேடி, கனடிவாலாவின் தீர்ப்பை எதிர்க்கும் விதமாக நீதிபதி புஷ்பா
கனடிவாலா உள்ளிட்ட 12 பேருக்கு 150 ஆணுறைகளை
அனுப்பி அவமதித்துள்ளார்.மேலும் இதுகுறித்து பேசிய தேவ்ஸ்ரீ த்ரிவேடி, அநீதியை என்னால் பொறுத்துகொள்ள முடியவில்லை என்று கூறினார்.

நீதிபதி கனடிவாலாவின்தீர்ப்பால் மைனர் சிறுமிக்கு நீதி கிடைக்கவில்லை என்றும்
நீதிபதியை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். இல்லையெனில், இத்தகைய தீர்ப்பை தொடர்ந்து பலரும் குற்றச் செயலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கலாம் என தெரிவித்தார்.மேலும், ஒரு பெண்ணாக இச்செயலை செய்ததற்கு
தான் வருத்தப்படவில்லை எனவும் ஒவ்வொரு பெண்ணும் தனது
உரிமைக்கு குரல் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த நாக்பூர் கிளை வழக்கறிஞர்கள், தேவ்ஸ்ரீ த்ரிவேடியின் இச்செயல் குறித்து அவர் மீது அவமதிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement:

Related posts

கூகுளை தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் ஏற்பட்ட பிரச்னை…. பயனாளர்கள் அதிருப்தி!

Saravana

மு.க.ஸ்டாலின் எம்.ஜி.ஆருடன் உறவுமுறை கொண்டாடுகிறார்- செல்லூர் ராஜூ!

Jayapriya

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி வரும் 14ம் தேதி நாடு தழுவிய போராட்டம்! – விவசாய சங்கங்கள் அறிவிப்பு!

Nandhakumar