பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட 81 வயதான கவிஞர் வரவர ராவிற்கு மும்பை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.
2017 டிசம்பரில் புனேவில் நடைபெற்ற எல்கர் பரிஷத் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றிய வரவர ராவ், அடுத்த நாள் நடைபெற்ற பீமா கொரேகான் கலவரத்திற்கு காரணம் என 2018 ஆகஸ்டில் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில் உடல் நலக்குறைவு காரணமாக வரவர ராவ் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவர் மீதான வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 2.5 ஆண்டுகளுக்கு பின்னர் மும்பை உயர் நீதிமன்றம் ராவிற்கு 6 மாதக்காலம் இடைக்கால ஜாமின் வழங்குவதாக தெரிவித்துள்ளது.
மேலும், அவருடைய பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும், பினைத் தொகையாக 50 ஆயிரம் செலுத்த வேண்டும், வழக்கு விசாரணை முடியும் வரை மும்பையில் இருக்க வேண்டும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை சந்திக்க கூடாது எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement: