பிரதமர் மோடி நாளை சென்னை வர உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்துள்ளன.
நாளை ஒரு நாள் சுற்றுப்பயணமாக சென்னை வரும் பிரதமர் மோடி, பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். காலை 10.30 மணி அளவில், டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் அவர், நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அத்துடன் அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசுகிறார். இதனையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பிரதமர் வரும் வழியெங்கும், சாலையின் இரு பக்கங்களிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதமரின் வருகையை ஒட்டி, போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Advertisement: