இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

மிரட்டும் கொரோனா: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா தொற்றின் 2-வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்றுக்காரணமாக தினமும் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழியும் நிலையில் ஆக்சிஜனுக்காக பலர் திணறி வருகின்றனர்.

இந்த சூழலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தும் தொற்று அதிகரித்து வருவதால் அது குறித்து ஆய்வு செய்வதற்கு பிரதமர் மோடி அமைச்சர்களுடன் வீடியோ கான்பரசிங் மூலம் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

காலை 11 மணியளவில் நடக்கும் இந்த ஆலோசனையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு வேறு என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே ராணுவ தளபதி நரவனேயுடன் நேற்று ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, கொரோனா கட்டுப்பாட்டு பணிகளுக்கு ராணுவம் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றி கேட்டறிந்தார். அப்போது ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நரவனே பிரதமருக்கு விளக்கியுள்ளார்.

Advertisement:

Related posts

கேரள உள்ளாட்சித் தேர்தல்: ஒரு ஓட்டில் பாஜகவிடம் தோல்வியடைந்த காங்கிரஸ் மேயர் வேட்பாளர்!

Arun

மெகபூப முப்தி பாஸ்போர்ட் நிராகரிப்பு!

L.Renuga Devi

பெரியாரை பின்பற்றுவதால் கமல்ஹாசன் முட்டாள்: ஹெச்.ராஜா

Jeba