அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இந்திய பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளர்.
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசும் பதவியேற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கை தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு பிறகு இருவரும் பதவியேற்றனர். அதிபராக பதவியேற்ற ஜோ பைடனுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் பிராந்திய பிரச்னைகள் மற்றும் பகிரப்பட்ட முன்னுரிமைகள் தொடர்பாக கலந்தாலோசித்ததாக கூறியுள்ளார். அதேபோல் காலநிலை மாற்றத்திற்கு எதிராக ஒன்றிணைந்து பணியாற்ற இருவரும் உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தோ- பசிபிக் எல்லையில் அமைதி மற்றும் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த ஜோ பைடனுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Advertisement: