இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

2-வது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர்!

பிரதமர் நரேந்திரமோடி இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார்.


பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் தவணையாக ‘கோவேக்சின் தடுப்பூசியை’ போட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து இன்று அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரோனா தொற்றை தடுப்பதற்கான சில வழிகளில் தடுப்பூசியும் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி போடுவதற்கு தகுதி உள்ளவர்கள் உடனே தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படியும் அதற்காக கோவின் என்ற அரசின் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளும்படியும் பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தி உள்ளார

இதனிடையே, எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொரோனா தடுப்பூசி போட்டது மறக்கமுடியாத தருணம் என செவிலியர்களான புதுச்சேரியை சேர்ந்த நிவேதா மற்றும் நிஷா சர்மா கூறியுள்ளனர். “பிரதமருக்கு இரண்டாவது தவணையாக தடுப்பூசி செலுத்தினோம். அவர் தங்களிடம் பேசியதாகவும், அவரை சந்திப்பதற்கும், தடுப்பூசி போடுவதற்கும் கிடைத்த இந்த வாய்ப்பை தன்னால் மறக்க இயலாது” என்று செவிலியர் நிஷா சர்மா மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.


Advertisement:

Related posts

வேட்புமனு தாக்கல் செய்த குஷ்பு: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Jeba

மருத்துவமனை ICU-க்களில் அதிக அளவிலான கொரோனா வைரஸ்!

Jayapriya

அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை : ஜெயக்குமார்

Nandhakumar