இந்தியா முக்கியச் செய்திகள்

இந்தியாவில் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி; பிரதமர் மோடி பாராட்டு!

கொரோனா தொற்று பரவல் குறையாத நிலையில் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சில நிறுவனங்கள் கண்டுபிடித்த மருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர அனுமதி அளிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில் சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது பாராட்டுக்குரியது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தடுப்பூசியை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்களுக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் ட்விட்டர் மூலம் தனது வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை மேலும் வலுப்படுத்த இது சிறந்த திருப்புமுனை எனவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

அமெரிக்க நாடாளுமன்ற வன்முறையை தொடர்ந்து 70,000 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்!

Saravana

தலைநகர் டெல்லியில் மறியல் போராட்டம் நடத்தப்போவதில்லை : விவசாய சங்கங்ள்

Niruban Chakkaaravarthi

செல்போன் பயன்படுத்துவதை தந்தை கண்டித்ததால், மகன் தூக்கிட்டு தற்கொலை!

Jayapriya

Leave a Comment