700 கோடி மதிப்பிலான இயற்கை எரிவாயு குழாய் அமைப்பினை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்பணித்தார்.
இந்தியன் ஆயிலின் ராமநாதபுரம்-தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் அமைப்பினை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நாட்டிற்கு இன்று அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
700 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த பைப்லைன் திட்டம் ராமநாதபுரத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி எரிவாயு வயல்களில் இருந்து இயற்கை எரிவாயுவினை தூத்துக்குடியில் மூலப்பொருளாக உள்ள பெட்ரோகெமிக்கல்ஸ் மற்றும் உரத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் விதமாக செயல்படுத்தப்படுகிறது.
நாளொன்றுக்கு 8 மில்லியன் மெட்ரிக்ஸ் டாண்டர்ட் கனமீட்டர் எரிவாயுவினை கொண்டும் செல்லும் கொள்ளளவு திறன் கொண்ட இந்த பைப்லைன் அமைப்பின் பயன்பாட்டுக்கென ராமநாதபுரத்தில் உள்ள வாலாந்தரவை கிராமத்தில் ஒரு கம்ப்ரெஸ்சர் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படும் மாபெரும் இயற்கை எரிவாயுகுழாய் திட்டத்தின் ஒருபகுதியாக இந்த குழாய் அமைப்பு விளங்கும்.
Advertisement: