இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

இளவரசர் பிலிப் மறைவுக்கு மோடி இரங்கல்!

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைவுக்கு பிரதமர் மோடி தன்னுடைய இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர், இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் மிக நீண்ட காலம் இளவரசராக இருந்த பிலிப் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.
இங்கிலாந்து ராணி, தம்முடைய இளம் வயதில் இங்கிலாந்தை ஆட்சி புரிவதிலும், சுற்றுசூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க வைத்ததிலும் இளவரசர் பிலிப்புக்கு பெரும்பங்கு உண்டு.


கடந்த மாதம் 17ஆம் தேதி உடல்நலக்குறைவால் லண்டனில் உள்ள கிங் ஏழாம் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். இதய பிரச்சினை காரணமாக மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் வின்ஸ்டர் கேசில் அரசமாளிகையில் இளவரசர் பிலிப் உடல்நல குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.

இது குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், “இங்கிலாந்து நாட்டு மக்களுக்கும், இங்கிலாந்து அரச குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இங்கிலாந்து ராணுவத்தில் மட்டுமல்லாமல் பல தன்னார்வ சேவைகளிலும் ஈடுபட்டுவந்த மறைந்த இளவரசர் பிலிப் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்” என கூறியுள்ளார்

Advertisement:

Related posts

காவலாளியை அரிவாளால் வெட்டிவிட்டு மதுபாட்டில்களை திருடிய கும்பல்!

Jayapriya

கொரோனா 2வது, 3வது அலை வர வாய்ப்பே இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

Niruban Chakkaaravarthi

திமுக பொய் வாக்கு உறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறது; அமைச்சர் ராஜலட்சுமி குற்றச்சாட்டு!

Saravana