முக கவசம் அணிவது, கைகளை சுத்தமாக வைத்திருப்பது உள்ளிட்ட கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் விழிப்புணர்வுடன் இருக்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், உலக சுகாதார தினத்தை ஒட்டி, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் விழிப்புணர்வின் அவசியத்தை, நாட்டு மக்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல் மற்றும் இதர பாதுகாப்பு வழி முறைகளை பின்பற்றுவதன் மூலம் கொரோனாவை எதிர்த்து போராடுவதில் கவனம் செலுத்துவோம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அதே நேரத்தில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியமாக வாழ தேவையான நடைமுறைகளை பின்பற்றுமாறும் அவர் கேட்டு கொண்டுள்ளார். மேலும், கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க இரவும், பகலும் உழைப்பவர்களுக்கு நமது நன்றி மற்றும் வாழ்த்துக்களை உறுதிபடுத்த வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
Advertisement: