தமிழகம் முக்கியச் செய்திகள்

நேதாஜி உருவப்படத்தை ரூபாய் நோட்டுக்களில் அச்சடிக்க கோரிய மனு!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவப்படத்தை, இந்திய ரூபாய் நோட்டுக்களில் அச்சடிக்க கோரிய மனுவை, மத்திய அரசு பரிசீலித்து உரிய முடிவெடுக்க, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் , பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படை அளப்பரிய பணிகளை செய்தது என்றும், அவரது உருவப்படத்தை இந்திய ரூபாய் நோட்டுக்களில் அச்சடித்து, அவரை கெளரவிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவானது நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், மற்றும் எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் மனுதாரரின் கோரிக்கை குறித்து, மத்திய அரசு பரிசிலிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்

Advertisement:

Related posts

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு!

Gayathri Venkatesan

சென்னையில் குடிசைப்பகுதி மக்களுக்கு ஒரு வாரத்திற்கு இலவச உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்!

Saravana

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: 170 பேர் மாயம், 19 பேர் உயிரிழப்பு!

Jayapriya

Leave a Comment