தமிழகம் முக்கியச் செய்திகள்

10.5 சதவீத உள் ஒதுக்கீடு : தடை கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட தற்காலிக சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் தற்காலிக சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் எப்படி இந்த சட்டம் இயற்றப்பட்டது என மனுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் லாபத்திற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டு உள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சட்டத்தால் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement:

Related posts

பாவம் பார்த்தாவது எங்களுக்கு ஓட்டு போடுங்கள்: சீமான்!

Jeba

100 நாட்களில் பொதுமக்கள் பிரச்னைகளை தீர்ப்பதாக ஸ்டாலின் கூறுவது சாத்தியமில்லை! – சரத்குமார்

Nandhakumar

விவசாயிகள் போராட்டம்: மனவேதனையில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை

Niruban Chakkaaravarthi