செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும்: வழக்கு!

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நேரத்தில் அவசரத் தேவை தவிர  பொது போக்குவரத்து உள்பட எந்தவித இயக்கத்திற்கும் அனுமதியில்லை. இதேபோல ஞாயிற்றுக் கிழமை முழு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இதனை எதிர்த்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அதில்,  “தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் சூழலில்,  முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அதன் தொடக்கமாக ஒவ்வொரு வாரமும்  ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.  

கடந்த 4 மாதங்களாக முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல் அரசியல் தலைவர்கள் பிரச்சாரங்களை மேற்கொண்டது கொரோனா நோய் தொற்று அதிகளவில் பரவ மிக முக்கிய காரணமாக அமைந்தது என்று குறிப்பிட்ட ராம்குமார் ஆதித்தன், “ஏற்கனவே கடந்த ஓராண்டாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக ஏழை எளிய மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு பொருளாதார மற்றும் உளவியல் ரீதியாக பொதுமக்கள் யாரும் தயாராக இல்லை. அதுபோல, இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கால் கொரோனா நோய் தொற்று குறையும் என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை” எனவும் கூறியுள்ளார். 

மேலும், “இரவு நேர ஊரடங்கில் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வேலையில்லா திண்டாட்டம், வறுமை போன்றவற்றால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியிருக்கும் நிலையில், வார இறுதி நாட்களில் ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு ஏற்க இயலாது ஆகவே அவற்றை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:

Related posts

பரமக்குடி அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது!

Jeba

தமிழகத்தில் டிச.15-க்குள் மினி கிளினிக்! – முதல்வர் பழனிசாமி

Dhamotharan

அசாம் சட்டப்பேரவை தேர்தல்: 3 கட்டங்களாக நடைபெறும்

Niruban Chakkaaravarthi