தமிழகத்தில், புதிதாக கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் நீடிப்பதாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று புதிதாக, 477 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 8 லட்சத்து 41 ஆயிரத்து 326 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 156 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 32 ஆயிரத்து 168 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 503 பேர், குணமடைந்து நேற்று வீடு திரும்பிய நிலையில், 3பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள சுகாதாரத்துறை, புதிதாக பாதிப்பு இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் நீடிப்பதாக தெரிவித்துள்ளது.
Advertisement: