செய்திகள்

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள்: செல்லூர் ராஜூ

தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றை நிறைவேற்றியதாக, திமுகவுக்கு வரலாறு கிடையாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில், நிறைவேற்ற முடியாத திட்டங்களை திமுக அறிவித்தது என்றும் எனவே, திமுகவின் தற்போதைய தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கப்படும், என திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் உள்ளது என்றும், முடிவுகள் விரைவில் தெரியவரும் என்றும் தெரிவித்தார்.

தேர்தலுக்காக பெண்களின் வாக்கு வங்கியை பெறும் நோக்கில், பொய்யான நாடகத்தை தேர்தல் அறிக்கை வழியாக, திமுக தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement:

Related posts

அமெரிக்க நாடாளுமன்ற வன்முறையை தொடர்ந்து 70,000 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்!

Saravana

14 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி!

Saravana

தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்காக இன்று கல்லூரிகள் திறப்பு!

Saravana