கர்நாடகவில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் விபத்தில் இறந்த பின் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளை பொதுமக்கள் ஒன்று திரண்டு தாக்கும் வீடியோ சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மைசூர் செக்-போஸ்ட் அருகிலுள்ள சாலையில் நடந்த விபத்தில் இரு சக்கர வண்டியில் வந்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரு சக்கர வண்டியை போலீசார் நிறுத்த முயன்றதால் இருவரும் வாகனத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டத்தாக பொதுமக்கள் நினைத்துக் காவலர்களை தாக்கியுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாகிறது.
பின்னர், இதுகுறித்து காவலர் கூறுகையில், இருவரும் பயணித்த வாகனம் லாரி ஒன்றின் மீது மோதியதாக தெரிவித்தார். லாரி போதியதால்தான் அவர் உயிரிழந்ததாகவும், அந்த சம்பவத்துக்கும் காவலருக்கும் சம்மந்தம் இல்லை என்று தெரிவித்தார். மேலும் லாரி ஓட்டுநருக்கு எதிராக ஐ.பி.சி 304A பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறினார். மக்களால் தாக்கப்பட்ட மூன்று அதிகாரிகளும், இச்சம்பவம் தொடர்பாக வெவ்வேறு பிரிவுகளின் கீழ் புகார்கள் அளித்துள்ளனர். புகாரின் பேரில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மைசூர் நகர காவல்துறையினர் தெரிவித்தனர்.
Advertisement: