சசிகலாவை வரவேற்க கூடும் தொண்டர்கள் ராணுவ கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் தொண்டர்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேட்ட்க்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சசிகலாவை வரவேற்க தொண்டர்கள் தயாராகி வருவது, அதிகாரத்தில் இருக்கும் சிலரை பதற்றமடைய வைத்துள்ளதாக கூறியுள்ளார். தமிழக டிஜிபி-யிடம் தொடர்ந்து புகார் அளிப்பதைப் பார்த்தால், சதித்திட்டம் தீட்டி, தொண்டர்கள் மீது பழிபோட முயற்சி செய்கிறார்களோ? என்ற சந்தேகம் எழுவதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதனால், சசிகலாவை வரவேற்க கூடும் தொண்டர்கள் ராணுவ கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வரவேற்பு ஏற்பாடுகளுக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளதால், தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து, போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்
எனவும் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.