செய்திகள் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

கொரோனா தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் – நடிகர் பார்த்திபன் ட்வீட்

நடிகர் பார்த்திபன் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்த சட்டமன்ற தேர்தலில் தன் வாக்கைப்பதிவு செய்ய முடியவில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நேற்று(ஏப்ரல் 6) ஒரே கட்டமாக 2021 ஆம் ஆண்டி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் எனப் பலர் அவரவர் சொந்த தொகுதியில் தன் வாக்குகளைச் செலுத்தினர். முதியோர் முதல்முறை வாக்காளர்கள் என அனைவரும் ஆர்வமுடன் தன் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

நடிகர் பார்த்திபன் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் தன் வாக்கை கவனமாகச் செலுத்த வேண்டும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்நிலையில் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட பார்த்திபனுக்கு ஒவ்வாமை காரணமாகக் கண் காது முகம் முழுவதிலும் வீக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரால் தன் வாக்கைச் செலுத்த முடியவில்லை என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்தார். மேலும் அவர் தனகு ஏற்கனவே ஒவ்வாமை இருந்ததாலேயே இந்த பிரச்சனை ஏற்பட்டதாகவும் மக்கள் அனைவரும் அவசியம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement:

Related posts

பிரேத பரிசோதனைக் கிடங்கிற்குள் புகுந்து உடலை எடுக்க முயன்ற உறவினர்கள் கைது!

Jeba

இன்று முதல் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை!

Niruban Chakkaaravarthi

நாட்டில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை; மத்திய அரசு விளக்கம்!

Saravana Kumar