உலகம் செய்திகள் முக்கியச் செய்திகள்

பாகிஸ்தானில் புதுமண தம்பதி சிங்ககுட்டியை வைத்து எடுத்த போட்டோஷுட்!

பாகிஸ்தான் லாகூர் பகுதியை சேர்ந்த் புதுமன தம்பதி, சிங்ககுட்டியை வைத்து தங்களது திருமண போட்டோஷுட் செய்த காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் தம்பதியினர் தங்களது திருமணத்தின் போது மயக்கமடைந்த சிங்கக் குட்டியை வைத்து போட்டோஷுட் எடுத்த காட்சி ,சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து விலங்குகள் நல உரிமை அமைப்பு அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த புகைப்படத்தை லாகூரைச் சேர்ந்த அஃப்ஸ்லின் என்ற போட்டோ ஸ்டுடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு #sherdani என்று பதிவிட்டுள்ளதாக தனியார் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, பாகிஸ்தானில் உள்ள விலங்குகள் நல அமைப்பான (save the wild) இந்த சம்பவம் குறித்து ,சிங்க குட்டியை ஸ்டுடியோவில் இருந்து மீட்குமாறு கோரியது. பலவித பிரச்சனைகளுக்கு பிறகு இன்ஸ்டாகிராம் மற்றும் பிற தளங்கள் அவர்களது புகைப்படங்களை அகற்றியது.

ஆனால் அதற்கு முன்பே அந்த புகைப்படங்களை பலர் பதிவிறக்கம் செய்த நிலையில், இப்போது இந்த புகைப்படம் பெருமளவில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து ஜே.கே.எப் விலங்கு மீட்பு அமைப்பானது, அந்த ஸ்டுடியோவிற்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

திருச்செங்கோட்டில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!

Jeba

“சுயமரியாதையை மீட்க திமுகவுக்கு ஆதரவு தாருங்கள்” ஸ்டாலின்!

L.Renuga Devi

ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது!

Jeba