மத்திய அரசின் பட்ஜெட் யாருக்கும் பயன் பெறாத மோசடி பட்ஜெட் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா காளாப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகம், கேரள மாநிலங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சாலைதிட்டங்கள் குறித்த விவரங்கள் இல்லை என்றார்.
பெட்ரோல், டீசல் மீதான வரியால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்தார். சிறுகுறு தொழில்களுக்கும், குடிசை தொழில்களுக்கும் என யாருக்குமே பயன் பெறாத மோசடி பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளதாகவும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
Advertisement: