செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

சொந்த தொகுதியில் வாக்களித்த ப.சிதம்பரம்!

2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் அவரது சொந்த தொகுதியில் இன்று வாக்களித்தார்.

தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெறுகிறது. திமுக கட்சித்தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் இன்று வாக்களித்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அவரது சொந்த தொகுதியான சிவகங்கையில் இன்று வாக்களித்தார். காலை 7 மணிக்கே வாக்குச்சாவடிக்குச் சென்று தனது வாக்கினைச் செலுத்தினார். அவருடன் காங்கிரஸ் கட்சியினரும் வாக்களிக்கச் சென்றனர்.

Advertisement:

Related posts

உரிய நேரத்தில் ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்த்து வழங்கப்படும்! – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

Jayapriya

“கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம்” – கமல்ஹாசன் பேட்டி

Saravana Kumar

புதுச்சேரி பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர் சங்கர் காலமானார்!

Saravana