தமிழகம் முக்கியச் செய்திகள்

ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை!

புதிதாக ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைப்பது தொடர்பாக சிஐஐ அமைப்பினர் தமிழக தொழில்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ள நிலையில், புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைப்பது தொடர்பாக சிஐஐ அமைப்பினர் தொழில்துறை அதிகாரிகளுடன் காணொலி மூலம் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க தொழில்துறையினர் முன்வந்துள்ள நிலையில் இதுவரை 10 நிறுவனங்கள் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஆலோசனையில், விரைவாக ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement:

Related posts

திட்டமிட்டபடி ஐபிஎல் டி20 தொடர் நடைபெறும் : சவுரவ் கங்குலி

Karthick

”தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்குகள் திறக்கப்படும்”- முதல்வர் பழனிசாமி!

Jayapriya

கர்ப்பிணி மனைவியை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை: தேனி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Saravana