உலகம் செய்திகள் முக்கியச் செய்திகள்

ஆக்ஸ்போர்டு பல்கலைகழக அமைப்பின் இந்தியவைச் சேர்ந்த தலைவர் பதவி விலகல்; காரணம் என்ன?

ஆக்ஸ்போர்டு பல்கலைகழக மாணவர் அமைப்பின் தலைவராக இந்தியவைச் சேர்ந்த ராஷ்மி சமந்த் இனவாத செயலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவர் தற்போது பதவி விலகி உள்ளார்.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த ராஷ்மி சம்ந்த் (22). பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழக மாணவர் அமைப்பின் தலைவராக பொறுப்பேற்று வரலாறு படைத்திருந்தார்.

இந்நிலையில் அவர் தனது சமூக வலைதளத்தில் 2017ஆம் ஆண்டு மலேசியாவிற்கு சென்று அங்கிருந்தப்படி புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் Ching Chang (“செடிகளை சாப்பிடு”) என சீன மக்கள் பேசக்கூடிய மாண்டரின் மொழியில் குறிப்பிட்டிருந்தார். அப்பகுதியில் சைவ உணவு கிடைக்காத காரணத்தால் அவர் அப்படி பதிவிட்டதாகக் ராஷ்மி சமந்த் தெரிவித்துள்ளார்.

அந்த புகைப்படத்திற்கு குறிப்பிட்ட தலைப்பு இனவாதம் தூண்டும்விதமாக இருப்பதாக சமீபத்தில் பலர் எதிர்ப்புகளை பதிவிட்டிருந்தனர். இது ஆக்ஸ்போர்டு பல்கலைகழக மாணவர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் அவர் LGBT-க்கு எதிராக ஓர் பதிவையும் அவர் பதிவிட்டிருந்தார். அதற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் இனவாதத்திற்கு எதிரான விழிப்புணர்வு அமைப்பு கண்டனத்தைத் தெரிவித்தது.

இந்நிலையில் அவரது செயலுக்கு ராஷ்மி சமந்த் மன்னிப்பு கடிதம் எழுதி, தான் இந்த செயலுக்கு வருந்துவதாகவும் கூறி அவர் பதவி விலகி உள்ளார். மேலும் ராஷ்மி சமந்த் செயல் காரணமாக ஆக்ஸ்போர்டு பல்கலைகழக மாணவர் அமைப்புமும் தனது
தரப்பில் மன்னிப்புக்கோரியுள்ளது.

Advertisement:

Related posts

பெரியார் சிலை மீது காவி துண்டு போர்த்திய மர்ம நபர்கள்!

Gayathri Venkatesan

ஓடிடி தளங்களுக்கு கட்டுபாடு: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்!

Jayapriya

ஹேர் ஸ்ப்ரேயால் வந்த வினை: இளம் பெண் தவிப்பு!

Jayapriya