இந்தியா முக்கியச் செய்திகள்

டெல்லியில் 1,000 கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்பட்டதா?

டெல்லி கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குறித்து அரசு வெளியிட்ட புள்ளி விவரத்திற்கும், மயானத்தில் எரியூட்டப்பட்ட உடல்களின் எண்ணிக்கைக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.


டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்த பலரின் உடல்களை ஒரே இடத்தில் வைத்து எரியூட்டும் புகைப்படம் வெளியாகி இந்தியாவில் கொரோனாவால் ஏற்படுத்தி வரும் கோர முகத்தை உலகுக்கு வெளிக்காட்டியது. இதனால் உலகெங்கிலும் இருந்து இந்தியாவிற்கு ஆதரவுக் கரங்கள் நீண்டு வருகின்றன.

அதே சமயம் இன்னும் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களும் கிடைத்துள்ளன. கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை அரசு பதிவுகளை விட அதிகமாக இருக்கக் கூடும் என தனியார் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லி நகராட்சி நிர்வாகத்திடம் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 26 இடுகாடுகளில் ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 24ம் தேதி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 3,096 சடலங்கள் தகனம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. அதே நாட்களில் 1,938 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. 1,158 இறப்புகள் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஏன் இவ்வாறான குழப்பங்கள் ஏற்படுகிறது என விசாரித்தால், மருத்துவமனைகளிலிருந்து கொண்டு வரப்படும் சடலங்களை மட்டுமே டெல்லி மாநகராட்சி கணக்கிட்டுள்ளது.

மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆம்புலன்சில் தகுந்த கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் கொண்டுவரப்படுகின்றன. ஆனால், வீடுகளில் இருந்து கொண்டுவரப்படும் உடல்களுக்கு அவ்வாறான நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்று குறிப்பிட்ட காசிப்பூர் மயானத்தில் பணியாற்றும் அனுஜ் பன்சால், அவர்களின் உயிரிழப்புக்கு சுவாசப் பிரச்சினையே முக்கிய காரணமாக இருப்பதாகவும் கூறுகிறார். மேலும், “மருத்துவமனையில் உயிரிழப்பவர்களுக்கு கொரோனா மரணம் என்றும் பதிவு செய்கிறோம். ஆனால், வீடுகளில் உயிரிழந்தவர்களை இயற்கை மரணம் என்ற பட்டியலில்தான் சேர்க்கிறோம்” எனவும் குறிப்பிட்டார்.

இறந்தவரின் குடும்பத்தினர் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்று சொன்னாலும் டெல்லி மாநகராட்சி கொரோனா மரணமாகக் கருதுவதில்லை. பதிலாக சந்தேகத்திற்குரிய மரணமாகவே பதிவு செய்கிறது. இருப்பினும் அவர்களது உடல் கொரோனா வழிகாட்டுதல்படியே தகனம் செய்யப்படுகிறது என்றும் கூறினார்.
நாள் ஒன்றுக்கு 20 சடலங்களைத்தான் எரிக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும் தற்போது டெல்லியிலுள்ள அனைத்து இடுகாடுகளிலும் நாளொன்றுக்கு 60 முதல் 70 உடல்கள் தகனம் செய்யப்படுகிறது. பெரும்பாலான மயானங்களில் இடமில்லாமல் தகனம் செய்ய 4 முதல் 5 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இதனால் அருகிலுள்ள பூங்காவில் 100 தகன மேடைகள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement:

Related posts

”நண்பர் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்பேன்”- கமல்ஹாசன்!

Jayapriya

இஸ்ரேலில் இனி பொது இடங்களில் முகக்கவசம் அணிய தேவையில்லை!

Gayathri Venkatesan

திமுகவினர் தனிமனித தாக்குதலில் ஈடுபடுவதாக ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

Karthick