தமிழகம் முக்கியச் செய்திகள்

”ஸ்டாலினின் பேராசையை நிராசையாக மாற்றுவோம்”- ஓ.எஸ்.மணியன்!

சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை கைப்பற்றுவோம் எனும் ஸ்டாலினின் பேராசையை நிராசையாக மாற்றுவோம் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

நாகையில் தனியார் கல்லூரி வெள்ளிவிழா ஆண்டு நுழைவு வளைவினை கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம் என ஆசைப்படுவதில் தவறில்லை என்றும் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் முதல்வர் என கூறிக் கொள்வதிலும் தவறில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மக்கள் யாரை விரும்புகிறார்கள் யாருடைய ஆட்சி வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதைத்தான் பார்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து வரலாற்றை படைக்கப் போகிறது என நம்பிக்கை தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை கைப்பற்றுவோம் எனக்கூறும் ஸ்டாலின் ஏன் 34 தொகுதிகளை சேர்க்காமல் விட்டு விட்டார் என கேள்வி எழுப்பிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஸ்டாலினின் பேராசையை, நிராசையாக மாற்றுவோம் என திட்டவட்டமாக கூறினார்.

Advertisement:

Related posts

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து; உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

Niruban Chakkaaravarthi

மீண்டும் களத்தில் விஜயகாந்த்!

Niruban Chakkaaravarthi

தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா!

Nandhakumar

Leave a Comment