தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

ஓபிஎஸ் தீவிர வாக்கு சேகரிப்பு!

திமுக வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியின் அதிமுக வேட்பாளரும் தமிழக துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், தொகுதிக்கு உட்பட்ட வீரபாண்டி பேரூராட்சியில் பரப்புரையில் ஈடுபட்டார். அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், மூன்றாவது முறையாக போடிநாயக்கனூர் சட்டமன்ற வேட்பாளராக தன்னை தேர்ந்தெடுத்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். திமுக வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு எனவும் அதிமுக வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு என்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

விமான நிலையத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!

Gayathri Venkatesan

புதுச்சேரியை பாஜகவிடமிருந்து காப்பாற்றவேண்டும்: திருமாவளவன்

L.Renuga Devi

மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த கேரள லாரிகள்!

L.Renuga Devi