செய்திகள்

வாக்கு எண்ணிக்கையின் போது, அதிமுகவினர் சுற்றிச்சுழன்று கண்காணிக்க வேண்டும் : ஓபிஎஸ், இபிஎஸ்

வாக்கு எண்ணிக்கையின் போது, அதிமுகவினர் சுற்றிச்சுழன்று கண்காணிக்க வேண்டும், என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர், கூட்டாக தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு, என்ற பெயரில் வெளியான செய்திகள், கட்சியினர் மனதில் சஞ்சலத்தை தரவில்லை என தெரிவித்துள்ளனர்.

2016-ல் எதிர்மறையாக வந்த கருத்துக்கணிப்பை பொய்யாக்கி, அதிமுக ஆட்சி அமைத்ததாக தெரிவித்துள்ள அவர்கள், தற்போதைய கணிப்புகள் அதிமுகவினரை, ஜனநாயக கடமை ஆற்றவிடாமல் செய்யும் முயற்சியே எனக் கூறியுள்ளனர். ஒரு வாக்கு கூட நம்மிடம் இருந்து பறிக்கப்படாத வண்ணம், சுற்றிச் சுழன்று கடமையாற்ற வேண்டும் என்றும், திமுகவினர் தில்லுமுல்லு செய்தால், அதிகாரிகளுக்கு தெரிவித்து தீர்வு காண வேண்டும், என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அனைத்து சுற்று வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்ட பின்னரே, முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து வெளியேற வேண்டும், என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisement:

Related posts

மாதவிடாய் குறித்த சமூக தடையைக் நீக்கவேண்டும்: குஜராத் உயர் நீதிமன்றம்!

Jeba

காதலனுக்காக 50 ஆண்டுகள் வரை திருமணம் செய்யாமல் காத்திருந்த ஆஸ்திரேலிய பெண்!

Gayathri Venkatesan

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 13,000ஐ நெருங்கியது!

Niruban Chakkaaravarthi