திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு செல்லாத ரூபாய் நோட்டு என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.
போடிநாயக்கனூர் தொகுதிக்குட்பட்ட பழனிசெட்டிப்பட்டியில் அவர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பெண்கள் மற்றும் ஏழைகளுக்காக அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த கால தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தையும் அதிமுக அரசு நிறைவேற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் அதிமுக நிறைவேற்றும் என்றும் ஓ. பன்னீர் செல்வம் வாக்குறுதி அளித்தார். திமுக ஆட்சி காலத்தில் ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டினார்.
Advertisement: