செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

ஏழைமக்களுக்கு 6 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது : ஓபிஎஸ்!

அதிமுக ஆட்சியில் ஏழைமக்களுக்கு 6 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

போடி தொகுதி அதிமுக வேட்பாளரும் தமிழக துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் தனது நான்காம் கட்ட பரப்புரையை கொடுவிலார்பட்டி கிராமத்தில் துவக்கி 17 கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

கொடுவிலார்பட்டி கிராமத்தில் உள்ள ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து, பின்னர் அவர் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இதையடுத்து அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடையே உரையாற்றிய அவர், அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரித்தார்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சிறப்பம்சங்களையும் எடுத்துரைத்தார். பெண்களின் முன்னேற்றத்திற்காக ஏராளமான திட்டங்கள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெருமிதத்துடன் கூறினார்.

Advertisement:

Related posts

மதுரையில் 17ஆம் நூற்றாண்டின் கல்வெட்டு, மாலைக்கோவில் கண்டுபிடிப்பு!

Gayathri Venkatesan

“கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் அட்டை அவசியமில்லை” – தமிழிசை சௌந்தரராஜன்

Karthick

கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்தால், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்; முதல்வர் அறிவிப்பு!

Saravana Kumar