செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

திமுக தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு: ஒபிஎஸ்!

திமுகவின் தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு என்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு என்றும் தமிழக துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை மலுமிச்சம்பட்டியில் சட்டபேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், ஸ்டாலின் சொல்வதெல்லாம் பொய் என்றும் பொய்யிலேயே பிறந்து பொய்யிலேயே வளர்ந்தவர் ஸ்டாலின் என்றும் சாடினார். ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து டெல்லிக்கு சென்று பிரதமரிடம், தான் விளக்கியதாகவும் உண்மையான ஜல்லிகட்டு நாயகன் பிரதமர் தான் எனவும் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

மேலும், அதிமுக செய்துள்ள பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார்.

Advertisement:

Related posts

ரயில் பயணத்தின் போது செல்போனுக்கு சார்ஜ் போடத் தடை- ரயில்வே நிர்வாகம் அதிரடி!

Karthick

“திமுகவும் அதிமுகவும் மக்களை ஏமாற்றி வருகின்றனர்” – கமல்ஹாசன் குற்றச்சாட்டு

Saravana Kumar

கொரோனா பரவல்: மூன்று மாநிலங்களில் மத்திய குழு ஆய்வு!

L.Renuga Devi