காதலர் தினத்தை முன்னிட்டு சிம்ஸ்பூங்கா, லேம்ஸ்ராக் உள்ளிட்ட குன்னூர் சுற்றுலாப் பகுதிகள் குவிந்துவரும் காதலர்கள் கூட்டத்தால் களைகட்ட தொடங்கியுள்ளது.
காதலர் தினம் பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில், இதற்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும், தற்போது இந்த மோகங்கள் தமிழகங்களில் ஓரிரு இடங்களில் நடந்து வருகிறது. காதலர் தினத்தை கொண்டாடும் விதமாக, இவர்கள் சுற்றுலா மையங்களை தேர்ந்தெடுத்து அதிகளவில் அங்கு கொண்டாடி வருகின்றனர்.
இதில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சுற்றுலா தளங்களான சிம்ஸ்பூங்கா, லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக காதல் ஜோடிகள் பூங்காளில் உலா வருதும் செல்பி எடுப்பதும் அதிகரித்துள்ளது. வடமாநிலங்கள் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து காதலர்கள் சுற்றுலாப் பகுதிகளில் உலா வருகின்றனர். மேலும், காதலர்களுக்கு பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புகள் எழுந்துள்ளதால், குன்னூர் சுற்றுலா தளங்களில் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Advertisement: