தமிழகம் முக்கியச் செய்திகள்

8ம் தேதிக்குப் பிறகு திமுக வேட்பாளர் பட்டியல்!

திமுக வேட்பாளர் பட்டியல் வரும் 8ம் தேதிக்கு பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் திமுக தலைமை அலுலவலகமான அண்ணா அறிவாலயத்தில், அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, தொகுதி பங்கீடு விவகாரத்தில், திமுக பெரிய அண்ணன் போக்குடன் நடந்துகொள்ளவில்லை என தெரிவித்தனர். திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் பெரியண்ணன் மனோபாவத்தோடு எப்படி நடந்துகொள்ள முடியும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

கூட்டணிக் கட்சிகள் புதிய சின்னத்தில் நிற்பதைவிட ஏற்கனவே மக்களிடம் அறிமுகமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது நல்லது என தெரிவித்த அவர்கள், அதே நேரம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு, எந்த ஒரு கூட்டணிக் கட்சியையும் திமுக வற்புறுத்தவில்லை, எனத் தெரிவித்தனர்.

மொத்தம் 7 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும், வரும் 8ம் தேதிக்கு பின்னர் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும், என்றும் ஆர்.எஸ்.பாரதியும், கே.என்.நேருவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். திமுக கூட்டணி கட்சிகளிடையே மனக் கசப்பு எதுவும் இல்லை என்றும் கூறினர்.

Advertisement:

Related posts

மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் வசூல்!

Saravana Kumar

உலக கோடிஸ்வரர் பட்டியலில் இடம்பெற்ற 18 வயது இளைஞர்!

L.Renuga Devi

நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட உள்ள தினகரன்

Saravana Kumar