செய்திகள்

போடிநாயக்கனூரில் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை

போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடந்தது.இதில் அதிமுக, திமுக தலைமையில் ஓர் கூட்டணியும், அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தலைமையில் ஓர் அணியும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மற்றொரு அணியும் களம் இறங்கின. சீமான் தலைமையிலான நாம் தமிழா் கட்சி, தனியாக போட்டியிட்டது.

தேர்தலில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகின.தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் திமுக முன்னிலை பெற்றது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் இன்று காலை 10 மணி நிலவரப்படி போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை பெற்றுள்ளார்.
…………

Advertisement:

Related posts

“மக்களாட்சிக்கும் குடும்ப ஆட்சிக்கும் இடையே நடைபெறும் யுத்தம்தான் இந்த தேர்தல்”:அமித்ஷா

Karthick

“அதிமுகவின் கனவு பகல் கனவு” – முத்தரசன் விமர்சனம்

Saravana Kumar

நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் தனித்து போட்டி!

L.Renuga Devi