இந்தியா முக்கியச் செய்திகள்

ரொட்டியில் எச்சில் துப்பியவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

திருமண நிகழ்ச்சி ஒன்றில் ரொட்டியில் எச்சில் துப்பியவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் தந்தூரி சமைப்பதற்கு முன்னதாக சமையல்காரர் சோஹைல் என்பவர் எச்சில் துப்பிய வீடியோ ரகசியமாக பதிவு செய்யப்பட்டு சமூகவலைதளத்தில் பதிவு செய்யப்பட்டது. இதுவைரலானதை தொடர்ந்து சமூகவலைதளத்தில் பலரும் சோஹலை கைது செய்து கடுமையான தண்டனை வாங்கி தரவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் குடும்பத்தினர் சமீபத்தில் சோஹலுக்கு ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்தனர். ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்கினால் சோஹல் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடலாம் என எண்ணி கோர்ட் அவருக்கு ஜாமீன் தர மறுத்துவிட்டது. இந்நிலையில், அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

மாநகர் மேயரான எலக்ட்ரீசியனின் மகள்!

Niruban Chakkaaravarthi

‘கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் தேவை, விருப்பம் என விவாதிப்பது அபத்தம்’ ராகுல்காந்தி!

L.Renuga Devi

தென் தமிழகத்தில் நாளை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

Niruban Chakkaaravarthi